Categories
சினிமா

டிஸ்கவரி சேனலில் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சி மார்ச் 23ம் தேதி இரவு 8 மணி ஒளிபரப்பாகவுள்ளது என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி சேனலுக்கான நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினார்.

இதன் படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பியர் கிரில்ஸ் ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பினார். நடிகர் ரஜினியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் என்று பியர் கிரில்ஸுக்குப் பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில், ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு வரும் மார்ச் 23-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. இதற்கான முன்னோட்ட விடியோவையும் டிஸ்கவரி சேனல் தன்னுடைய ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளது.

Categories

Tech |