Categories
பல்சுவை

“டிஸ்னி பூங்கா” 300 முறை நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம்…. சோதனைகளைத் தாண்டி சாதனை…. ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

அமெரிக்கா அனிமேஷன் துறையின் முன்னோடியாக விளங்கிய வால்டர் எலியாஸ் டிஸ்னி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் மிக்கி மவுஸ்,‌ டொனால்ட் டக், சிண்ட்ரெல்லா போன்ற பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். இவர் கடந்த 1950-ம் ஆண்டு ஒரு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் வங்கியில் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். இதற்கு முன்பு வால்ட் டிஸ்னியின்‌ விண்ணப்பத்தை 156 முறை வங்கியில் நிராகரித்துள்ளனர். இதேபோன்று 300 முறை வங்கியில் கடன் நிராகரிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய அனிமேஷன் கனவை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் அனிமேஷன் படங்களை பெரிதாக மக்கள் நம்பாததால் வங்கியில் இவருடைய கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர் வேலை பார்த்த நிறுவனம் வால்ட் டிஸ்னியை வேலையிலிருந்து தூக்கியுள்ளனர். இருப்பினும் தன்னுடைய தோல்விகளை என்னை கவலை அடையாமல் வால்ட் டிஸ்னி  தொடர்ந்து முயற்சி செய்து அனிமேஷன் படங்களை உலகிற்கு கொண்டு வந்தார். இதனையடுத்து கடந்த 1995-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொழுதுபோக்கு பூங்காவான டிஸ்னி லேண்டையும் கட்டியுள்ளார். அதன்பிறகு ஃப்ளோரிடாவின் ஆர்லோண்டாவிற்கு அருகில் வால்ட் டிஸ்னி என்ற 2-வது பூங்காவை கட்டினார். இவருடைய டிஸ்னி நிறுவனம் உலகத்திலேயே மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

Categories

Tech |