Categories
தேசிய செய்திகள்

டி.ஆர்.பி முறைகேடு – Republic தொலைக்காட்சிக்கு BARC கண்டனம்

டி.ஆர்.பி முறைகேடு தொடர்பான புகாரில் தங்களது தனிப்பட்ட உரையாடலை சித்தரித்து ஒளிபரப்பியதாக Republic தொலைகாட்சிக்கு BARC அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள Republic சேனல் மராத்தியை சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டி.ஆர்.பி முறைகேட்டில் ஈடுபட்டு செயற்கையாக பார்வையாளர்களையும் வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக டி.ஆர்.பி ரேட்டிங்கை மதிப்பிடும் BroadCast Audience Research Council என்ற அமைப்பு புகார் அளித்தது. இந்த மோசடி தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தங்களது தொலைக்காட்சி எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என பொதுவெளியில் உறுதிப்படுத்துமாறு Republic தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விசாரணை விகாஸ் காஞ்சந்தானி, பார்க் அமைப்பிற்கு கடந்த 16-ம் தேதி மின்னஞ்சல் எழுதினார்.

இதற்கு பதிலளித்துள்ள பார்க் அமைப்பு ரிபப்ளிக் நிறுவனம் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தேவையான ஆவணங்களுடன் பார்க் அமைப்பு தங்களை தொடர்பு கொண்டு இருக்கும் என்று பதிலளித்துள்ளது. இந்த உரையாடலை தங்களது சமூக ஊடகங்களில் வெளியிட்ட Republic தொலைக்காட்சி இந்த மின்னஞ்சல் மூலம் தங்கள் மீது எந்தவித தவறும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள பார்க் அமைப்பு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் தாங்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளது. தங்களது தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல் தொடர்புகளை தவறாக சித்தரித்து ஒளிபரப்பியதற்காக ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் பார்க் அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |