கடந்த வார டி.ஆர்.பி-யில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சுசித்ரா பாக்கியலட்சுமியாக நடித்து வருகிறார். மேலும் விஷால், ரேஷ்மா, நேகா மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கோபியின் தவறு எப்போது வெளிவரும், அவர் எப்போது குடும்பத்தினரிடம் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டி.ஆர்.பி-யில் பாக்கியலட்சுமி சீரியல் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது கடந்த வார டி.ஆர்.பி-யில் விஜய் தொலைக்காட்சியில் இந்த சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.