Categories
சினிமா

“டி.இமான் முன்னாள் மனைவி மீது வழக்கு”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக டி.இமான் இருந்து வருகிறார். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களுக்கு இமான் இசை அமைத்து வருகிறார். அண்மையில் தனது மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக டி.இமான் அறிவித்தார். சென்ற 2008 ஆம் வருடம் மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் கடந்த வருடம் நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பின் டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில் முன்னாள் மனைவி மோனிகா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இமான் வழக்கு ஒன்று தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “என் 2 மகள்களுடைய பாஸ்போர்டுகள் தன்னிடம் உள்ளது. ஆனால் மோனிகா அதனை மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு குறித்த விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா இருவரும் இதுகுறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |