தமிழ்நாடு டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. இன்று சேலத்தில் 25-வது லீக் ஆட்டம் இரவு 7:15 மணியளவில் தொடங்குகிறது. இந்த மேட்சில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணியினர் மோதுகின்றனர். இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி பெற்று 2-து இடத்தில் இருக்கிறது.
இந்த அணியினர் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றை கைப்பற்றி அடுத்த ரவுண்டுக்கு முன்னேறி விடுவார்கள். இதனையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணியனர் நடைபெற்ற 6 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்று 5-வது இடத்தில் இருக்கின்றனர். இந்த அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.