Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி காக், லீவிஸ், பிஷ்னோய் ஆட்டம் வேற லெவல்…. பாராட்டித் தள்ளிய கேப்டன் கே.எல்.ராகுல்….!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ அணி மோதியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டி காக், லீவிஸ் அதிரடி ஆட்டத்தால் லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், சென்னை அணிக்கு எதிராக 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை இளம் சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் கைப்பற்றியதை பாராட்டினார்.

மேலும் பிஷ்னோய் கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் இதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ராகுல் கூறியுள்ளார். இதனைப் போலவே ஆயுஸ் படோனி பேட்டிங் தனித்துவமானது என்றும், அவர் இந்தியாவின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எனவும் பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் குயின்டன் டி காக், லூயிஸ் இருவரும் சிறந்த பார்மில் இருப்பதாகவும், இருவரது வலது மற்றும் இடது கை பேட்டிங் அணிக்கு உதவியாக இருப்பதாகவும் ராகுல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |