Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ராஜேந்தர் உடல்நிலை…… என்ன ஆச்சு…..! வெளியான முக்கிய தகவல்….!!!!

உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட பிரபல நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திரைப்பட நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது இதயம் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த டி ராஜேந்தர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவரது மகன் சிம்பு நாளை மருத்துவமனை வந்து அவரை நேரில் சந்தித்து மருத்துவர்களிடம் அவரின் சிகிச்சை குறித்து கேட்டறிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |