இயக்குனர், நடிகர், பாடல் ஆசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவால் சென்ற 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். இவருக்கு இருதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து மேல் சிகிச்சை பெற டி.ராஜேந்தர் சென்ற 14ஆம் தேதி அமெரிக்கா சென்றார். இந்தநிலையில் டி.ராஜேந்தர் அமெரிக்க மருத்துவமனையில் உள்ள ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் டி.ராஜேந்தர் குணம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிம்புவுடன், டி.ராஜேந்தர் உள்ள புகைப்படமானது வைரலாகி வருகிறது.