Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ராஜேந்தர் உடல்நிலை….. சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்…..!!!!

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்ட டி ராஜேந்திரருக்கு கடந்த மாதம் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதை அடுத்து அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி ராஜேந்திரன் பூரண குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்துள்ள நிலையில் ஒரு மாதம் அமெரிக்காவில் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் டி ராஜேந்தர் அவரது மகன்களான சிம்பு மற்றும் இளவரசன் உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Categories

Tech |