பிரபல நடிகர் டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிலம்பரசன் இணைகிறார்.
நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்திரன் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அதில் VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவினங்களை தவிர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான உஷா ராஜேந்தர், STR பிச்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மேலும் சில பிரபலங்கள் இந்த சங்கத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.