Categories
தேசிய செய்திகள்

டி-ஷர்ட்டில் சுஷாந்த் சிங் புகைப்படம்…. சர்சையில் சிக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்….!!!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இன்றுமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் புகைப்படத்தால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி-ஷர்ட்டை விற்பனை செய்து வருகின்றது. அந்த புகைப்படத்தில் “Depression is like drowning” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், சுஷாந்த் சிங்கை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றன. இது குறித்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் விற்பனை செய்யப்பட்ட டி-ஷர்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |