Categories
மாநில செய்திகள்

“டி1 அம்பத்தூர் போலீஸ் நிலையம்”…. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு…..!!!!!

சென்னை ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் வழியில் டி1அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவர் இனமக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை, கடனுதவி போன்றவற்றை வழங்கினார். அதனை தொடர்ந்து நரிக்குறவ மாணவியான திவ்யாவின் வீட்டுக்குச் சென்று காலை உணவு மற்றும் தேநீர்அருந்தினார்.

அதன்பின் நரிக்குறவ மக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பும் வழியில் டி1 அம்பத்தூர் போலீஸ் நிலையத்திற்குச் முதல்வர் ஸ்டஸிலின் திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு கேட்டறிந்தார்

Categories

Tech |