Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 தரவரிசையில்….. தொடர்ந்து முதலிடம்…. “கெத்து காட்டும் சூர்யா”….. சறுக்கிய பாபர் அசாம்..!!

டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த 3  வாரங்களுக்கு முன்னதாக (நவ.,2ஆம் தேதி) வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதன்பின் அவர் கீழே இறங்கவில்லை.. அதனை தற்போது அப்படியே தக்க வைத்துள்ளார் சூர்யா. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய சூர்யா 30 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.. அதேபோல பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தை தக்கவைத்துள்ளார்.

மேலும் 3ஆவது இடத்திலிருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 4 ஆவது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே 3 வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.  டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார். மற்றபடி எந்த இந்திய பேட்டரும் இல்லை. மேலும் விராட் கோலி 2 இடங்கள் சறுக்கி 13 வது இடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக கே.எல் ராகுல் 2 இடங்கள் சறுக்கி 19வது இடத்திலும், ரோகித் சர்மா 3 இடங்கள் சறுக்கி 21 ஆவது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணி வீரர்  வனிந்து ஹசரங்கா (704 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் (698 புள்ளிகள் ) மற்றும் இங்கிலாந்து வீரர் அடில் ரசித் (692 புள்ளிகள )ஆகியோர் இருக்கின்றனர். மேலும் ஆல்ரவுண்டர்  தரவரிசை பட்டியலில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் (252 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியும் (233 புள்ளிகள்), மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவும் (194) இருக்கின்றனர்.

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை :

1 சூர்யகுமார் யாதவ் – 890 புள்ளிகள் (இந்தியா)

2. முகமது ரிஸ்வான் – 836 புள்ளிகள் (பாகிஸ்தான்)

3. டெவோன் கான்வே  – 788 புள்ளிகள் (நியூசிலாந்து)

4. பாபர் அசாம் – 778  புள்ளிகள் (பாகிஸ்தான்)

5. ஐடன் மார்க்ரம் – 748  புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா)

6. டேவிட் மலான் – 719 புள்ளிகள் (இங்கிலாந்து)

7. கிளென் பிலிப்ஸ் – 699புள்ளிகள் (நியூசிலாந்து)

8. ரீலி ரூஸோவ் – 693 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா)

9. ஆரோன் பிஞ்ச் – 680 புள்ளிகள் (ஆஸ்திரேலியா)

10. பதும் நிஷாங்கா  – 673 புள்ளிகள் (இலங்கை)

Categories

Tech |