ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது ..
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா – அயர்லாந்து அணிகள் மோதியது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 44 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 63 ரன்கள் எடுத்தார். மேலும் ஸ்டோய்னிஸ் 35 ரன்களும், மிட்செல் மார்ஷ் 28 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளும், லிட்டில் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 18.1 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லோர்கன் டக்கர் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் (9 பவுண்டரி, 1 சிக்ஸர்) 71 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியில் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா, கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்..
Australia complete a fine win to keep semi-final hopes alive 💪#T20WorldCup | #AUSvIRE | 📝: https://t.co/CW4eQlDZGZ pic.twitter.com/WdUP4gLfZE
— ICC (@ICC) October 31, 2022