டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றது..
இந்த தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உட்பட பல்வேறு நாடுகள் அறிவித்து விட்டது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் அணியும் அறிவித்துள்ளது. முகமது நபி தலைமையிலான அணியில் நஜிபுல்லா சத்ரான் துணை கேப்டனாக இருக்கிறார்.. மேலும் ரஷீத் கான், நஜிபுல்லா சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், முஜிப் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி:
முகமது நபி (கே ), நஜிபுல்லா சத்ரான் (து.கே), ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ ), அஸ்மத்துல்லா உமர்சாய், தர்வீஷ் ரசூலி, ஃபரித் அஹ்மத் மாலிக், ஃபசல் ஹக் ஃபாரூக்கி, ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், இப்ராஹிம் சத்ரான், முஜிப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், கைஸ் அகமது, ரஷித் கான், சலீம் சஃபி மற்றும் உஸ்மான் கானி.
ரிசர்வ் வீரர்கள் : அஃப்சர் ஜசாய், ஷராபுதீன் அஷ்ரஃப், ரஹ்மத் ஷா, குல்பாடின் நைப்.
🚨 BREAKING NEWS 🚨
Afghanistan Cricket Board today announced its 15-member squad for the ICC @T20WorldCup 2022, which will be played from 16th October to 13th November in Australia.
More: https://t.co/1x7it7hx5w pic.twitter.com/ToTKvyCzM4
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 15, 2022