Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : டி20 உலக கோப்பையிலிருந்து பும்ரா விலகல்?… ரசிகர்கள் அதிர்ச்சி…. மாற்று வீரர் இவரா?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. அதனைத்தொடர்ந்து குணமடைந்து தற்போது முடிந்த  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் இரண்டு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நேற்றைய போட்டியில் அவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே இருந்த முதுகில் ஏற்பட்ட காயமானது தற்போது முழுமையாக குணமடையவில்லை என்பதால் மீண்டும் அவருக்கு ஓய்வுக்கு செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளநிலையில் வேகப்பந்துவீச்சாளர் அந்த தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி இருப்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.. பும்ரா விலகும் பட்சத்தில் அவருக்கு பதில் முகமது ஷமி டி20 உலக கோப்பையில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |