Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸி முன்னாள் ஜாம்பவான் நியமனம்..!!

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என ஒவ்வொரு நாடுகளும் தங்களது அணியை வலுப்படுத்தி வருகின்றன.. இதற்கிடையே தற்போது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. இதில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கிறது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான அணி மிகச் சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. எனவே பாகிஸ்தான் டி20 உலக கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானின் ஆலோசராக ஹைடன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |