Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை : வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.!!

வங்கதேசத்துக்கு இந்திய அணி 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்..

இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி முதல் விளையாடி வருகிறது.. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹாசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 44 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 64 ரன்களும், கே.எல் ராகுல் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 50 ரன்கள் எடுத்தனர். மேலும் சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணியில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டுகளும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Categories

Tech |