ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா..
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு சென்று விட்டது. இந்நிலையில் சூப்பர் 12 ன் கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப் 2வில் முதலிடம் பிடித்து அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும். ஒருவேளை தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 61 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். மேலும் கே.எல் ராகுல் 35 பந்துகளில் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்) 51 ரன்களும், விராட் கோலி 26 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளும், நகர்வா, முசரபானி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரன்கள் சேர்க்காமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் சிக்கந்தர் ராசா மற்றும் ரியான் பர்ல் இருவர் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். மற்றபடி அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இறுதியில் 17.2 ஓவரில் ஜிம்பாப்வே அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரியான் பரல் 22 பந்துகளில் 35 ரன்கள் மற்றும் சிக்கந்தர் ராசா 24 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர். இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் குரூப் 2 பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி. எனவே அரையிறுதியில் நவம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா..
இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் புவனேஸ்வர் குமார், அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தல ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
India complete a big win over Zimbabwe to top the Group 2 table! ⚡
They will meet England in Adelaide in the semi-final 👊#T20WorldCup | #ZIMvIND | https://t.co/SFsHINI2PL pic.twitter.com/J6LxEEx2Ll
— ICC (@ICC) November 6, 2022