Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில்….. “தோனியை ஓவர்டேக் செய்த ரோஹித்”….. என்ன சாதனை?

ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்..

விராட் கோலி டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என 3 வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பிறகு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றது.

கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கூட 2 : 1 என்ற கணக்கில் வென்று இருந்தது.. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. இந்த வெற்றியின் மூலம் ரோஹித் சர்மா ஒரு புதிய சாதனையை  படைத்துள்ளார்..

அதாவது, ஒரு ஆண்டில் அதிக டி20 வெற்றிகளை பெற்ற எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்திருக்கிறார் ரோஹித் சர்மா.. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இதுவரையில் 21 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 16 போட்டிகளில் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.. இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு கேப்டனாக தோனி இருந்தபோது, அவரது தலைமையின் கீழ் இந்திய அணி 15 டி20 போட்டிகளை வெற்றி பெற்றிருந்தது சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை தான் ரோஹித் சர்மா முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்..

Categories

Tech |