Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட் டிக்கெட்…. அடித்துப் பிடித்து வாங்கிய ரசிகர்கள்…. தடியடி நடத்திய போலீசார்…. பரபரப்பு….!!!!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இவற்றில் மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்தது. 2-வது போட்டியானது நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. இதையடுத்து 3வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்குரிய  டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் திரண்டுவர தொடங்கினர். நேரம் போகபோக ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. இதனால் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை ஒழுங்குபடுத்தினர். இதன் காரணமாக சில ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |