டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ட்ரினிட்டாவிலும், 2,3-வது சுற்றுகள் செயிண்ட் கிட்ஸிலும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 4 மற்றும் 5-வது சுற்றுகள் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் நடைபெற இருக்கிறது.
ஆனால் அமெரிக்கா செல்வதற்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு விசா கிடைக்கவில்லை. இதனையடுத்து ஜார்ஜ் டவுன் நகரில் நடந்த இந்திய வீரர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு பிறகு அவசர கால விசா அனைத்து வீரர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்திய வீரர்கள் இன்று அமெரிக்காவுக்கு கிளம்புகின்றனர். மேலும் 4-வது சுற்று 6-ம் தேதியும், 5-வது சுற்று 7-ம் தேதியும் நடைபெற இருக்கிறது.