Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டீக்கடையில் ஏற்பட்ட தகராறு…. மாணவர்கள் செய்த அட்டகாசம்…. 5 பேர் கைது….!!

பேருந்து ஓட்டுனரை தாக்கி டீக்கடையை சேதப்படுத்திய 5 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லூரி பேருந்து மூலம் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தை கல்லூரி மாணவர்கள் சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்த டீக்கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது சில மாணவர்கலுக்கும், கல்லூரி பேருந்து ஓட்டுநரான தவமுருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் தவமுருகனை தாக்கி டீ கடையில் இருந்த நாற்காலி மற்றும் மேசைகளை தூக்கி வீசி சேதப்படுத்தியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் மாணவர்களை கண்டித்துள்ளார். ஆனால் மாணவர்கள் கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதியில் இருந்த மற்ற கடை வியாபாரிகள் உடனடியாக மாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த ராமேஸ்வரம் துணை சூப்பிரண்டு அதிகாரி தீபக் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு பேருந்து ஓட்டுநரை தாக்கி, டீ கடையை சேதப்படுத்திய 5 மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |