கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயற்சித்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகரில் வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் 100 ரூபாய் கள்ள நோட்டை வாலிபர் ஒருவர் தந்துள்ளார். இது குறித்து அந்த டீக்கடைக்காரர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கொரியர் தபால் மூலம் வேளச்சேரிக்கு கள்ள நோட்டுகள் அனுப்பப்படுவதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. உடனே கிண்டி போலீஸ் உதவி கமிஷனரும் வேளச்சேரி குற்றப்பிரிவியின் இன்ஸ்பெக்டர் கண்ணன் கொண்ட தனிப்படையினர் சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரியர் நிறுவனத்தில் கள்ள நோட்டு பார்சலை பெற வந்த சதீஷ் என்பவரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.
அவர்தான் டீக்கடையில் கள்ள நோட்டை மாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில் ஹைதராபாத் சேர்ந்த சுஜித் என்பவர் தனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார் என்பதும் அவரிடம் ரூபாய் 4000 அனுப்பினால் ரூபாய் 8000 திரும்பி அனுப்பியதாகவும் சதீஷ் கூறியுள்ளார். இதனை அடுத்து பிடிபட்ட சதீஷ்யிடம் இருந்து 500 ரூபாய் நோட்டில் 26 தாள்களும் 200 ரூபாய் நோட்டில் 8 தாள்களும் 100 ரூபாய் நோட்டில் 69 தாள்களும் என மொத்தம் ரூபாய் 21,500 கள்ள நோட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சதீஷை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.