Categories
தேசிய செய்திகள்

டீசல் தட்டுப்பாட்டால் அரசு பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…. பொதுமக்கள் அவதி….!!!

கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மாநில முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து கழகத்தின் தினசரி வருவாய் 6.5 கோடியாக உள்ளது. அதில் டீசல் செலவு மட்டும் 3.5 கோடி ஆகும். இதனை எண்ணெய் நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி 135 கோடியாக உயர்ந்துள்ளது.

அதனால் டீசல் வழங்குவதை நிறுத்தி விட்டன.இதன் காரணமாக போக்குவரத்து கழகம் தற்போது தினமும் பணம் செலுத்தி டீசல் கொள்முதல் செய்து வருகின்றது. இதன் காரணமாக கேரளா அரசு போக்குவரத்து கழகம் தனது சேவைகளை குறைத்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக கேரளா அரசு போக்குவரத்துக் கழகத்தில் நீண்ட தூர சேவைகள் மற்றும் 50 சதவீத பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இருந்தாலும் கனமழை காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது என அம்மாநில போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது

Categories

Tech |