Categories
உலக செய்திகள்

டீசல் வாங்குவதற்காக காத்திருந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. இலங்கையில் தொடரும் சோகம்….!!!

எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி வரிசையில் காத்திருக்கும் போது சிலர் மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 60 வயது முதியவர் ஒருவர் வரிசையில் காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் 5 நாட்களுக்காக டீசல் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்துள்ளார். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு முதியவர் இறந்திருக்கலாம்  என கூறப்படுகிறது. இந்த சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |