தமிழகத்தை விடவும் புதுச்சேரியில் டீசல் விலையானது லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறைவாக உள்ளது. இதனால் சரக்கு லாரிகள் கூடுதலாக டேங்க் பொருத்தி டீசல் நிரப்பி கொண்டு வெளிமாநிலங்களுக்கு செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாக இருந்தது.
ஆனால் புதுச்சேரியில் 86 ரூபாய் 45 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே லிட்டருக்கு 8 ரூபாய் வரை விலையில் வித்தியாசம் உள்ளதால் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் பெரும்பாலான லாரிகள் தங்களது லாரிகளுக்கு புதுச்சேரிக்கு சென்று டீசல் போட்டு செல்வதாக கூறப்படுகிறது.