பலவற்றின் உயர்வு காரணமாக மினி பேருந்து உரிமையாளர்கள் தொழிலை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.
கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் ஒன்று மினி பேருந்துகள் திட்டமாகும். இத்திட்டத்தை சென்ற 1997 ஆம் வருடம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டதாகும். பல அடிப்படை தேவைகளுக்கும் ஆணிவேராக இந்த மினி பேருந்து இருந்து வந்த நிலையில் தற்போது நஷ்டத்தை நோக்கி செல்வதால் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. ஈரோட்டு மாவட்டத்தை பொருத்தவரையில் பல கிராமங்களுக்கு இன்று வரை பொது போக்குவரத்து வசதி இல்லாமல் இருக்கின்றது.
பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மினி பேருந்துகளை நம்பியே இருக்கின்றார்கள். ஆனால் தற்போது டீசல் விலை உயர்வு, காப்பீடு கட்டண தொகை உயர்வு, வரி உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகிய பலதரப்பட்ட காரணங்களால் தொழிலை கைவிடும் நிலைமைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். இதனால் இத்தொழிலை நம்பி இருக்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். ஏராளமான மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா காலத்தில் இருந்த நிலையை காட்டிலும் தற்பொழுது மேலும் குறைந்துள்ளது. ஆகையால் நஷ்டத்தில் இயங்கும் இத்தொழிலை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என மினி பேருந்து உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.