Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“டீச்சர்…! போகாதீங்க….” பிரிவு உபசார விழா….. கண்ணீருடன் விடை கொடுத்த மாணவர்கள்…!!

பணியிட மாறுதல் பெற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு மாணவர்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 240 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 11 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி ஆசிரியையான ஜெனிட்டா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அனைத்து மாணவ மாணவிகளுடன் அன்பாக பேசி பழகி வந்துள்ளார். இதனால் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஜெனிட்டாவை மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வுடன் ஜெனிட்டா ஆலந்தூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதனால் மலைக்குடிப்பட்டி அரசு பள்ளியில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் ஜெனிட்டாவை கட்டியணைத்து கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

Categories

Tech |