கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர் கே.எல்.ராகுல். இந்நிலையில் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்த கே.எல்.ராகுலின் தந்தைக்கு தனது மகன் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது ஆசை. இதனால் சிறுவயதிலேயே கே. எல் ராகுலை ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்த்து விட்டுள்ளார். அப்போது டீம் கோச் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக நிற்க வைத்தார். அப்போது கே.எல்.ராகுல் தனக்கு பேட்டிங் தான் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அதற்கு கோச் பந்து எந்த திசைகளில் இருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு நீ விக்கெட் கீப்பராக நிற்க வேண்டும் என கூறியுள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆர்சிபி டீமில் விளையாடுவதற்கு கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது கே.எல்.ராகுல் 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் டீமில் இருந்தவர்கள் கே.ல்.ராகுலை எடுத்தது தவறு என்பது போல பேசியுள்ளனர். அதன்பிறகு விராட் கோலி, ஏபி.டி வில்லியர்ஸ் ஆகிய இருவரும் இணைந்து நீ நன்றாக விளையாடுகிறாய் உனக்கு இன்னும் சிறிது பயிற்சி தேவை என கூறி கே.எல்.ராகுலுக்கு ஊக்கம் அளித்தனர். அதன்பிறகு கே.எல்.ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்தான் இப்போது இந்திய கிரிக்கெட் டீமில் முக்கிய வீரராக இருக்கிறார்.