சென்னையில் தேனீர் கடை ஒன்றில் கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை திருடி சென்றவனை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையம் அருகே பிரதீப் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கடைக்கு வந்த நபர் டீ குடித்து விட்டு அதற்கான பணத்தை கொடுத்து விட்டு கடையை நோட்டம் பார்த்துள்ளார். பின்னர் பிரதீப் மற்ற வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுக்க வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து கல்லா பெட்டியில் இருந்த 4000 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து பதில் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.