கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் அமைந்துள்ள சந்தைக்கு அருகே சசி, பத்மராஜ், விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து டீக்கடையை நடத்தி வருக்கின்றனர். இந்த டீ கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 1,500 ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர்கள் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட செல்வன், ஜஸ்டின் ராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கூலி வேலை செய்து வந்தும் போதிய வருமானம் கிடைக்காததால் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கும் காரணமாக வருமானம் இல்லாததால் ஷட்டர் இல்லாத சிறிய கடைகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து பணம் திருடி வந்ததாகவும் கூறினர். இது குறித்து காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.