Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீ குடிக்கப் போன ஓட்டுநர்… 2 கி.மீ தானாக ஓடிய பேருந்து… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திருமங்கலம் காவல் நிலையம் பின்புறம் அண்ணாநகர் பணிமனை உள்ளது. அங்கு அரசு பேருந்துகளை இரவு நேரத்தில் ஓட்டுநர்கள் நிறுத்தி விட்டு செல்வார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் தடம் எண் 27 பி மாநகர பேருந்தை அண்ணாநகர் பணிமனையில் இருந்து ஓட்டுநர் வெளியே எடுத்து வந்துள்ளார். அங்கு வாசலிலே பேருந்தை இயக்கத்தில் நிறுத்திவிட்டு, அருகே இருந்த கடையில் டீ குடிப்பதற்காக ஓட்டுநர் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பேருந்து தானாக புறப்பட ஆரம்பித்தது.

அதனைக் கண்டு பதறிப்போன ஓட்டுநர் உடனே பேருந்தின் பின்னால் ஓடினார். ஆனால் பேருந்தை மர்ம நபர் ஒருவர் வேகமாக ஓட்டிச் சென்றார். பேருந்து சென்ற பாதையில் அந்த ஓட்டுநர் விசாரித்துக் கொண்டே இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். மாடி மேம்பாலம் அருகே அந்த மர்ம நபர் பேருந்தை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். பேருந்தை பத்திரமாக மீட்ட ஓட்டுநர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் பேருந்து கடத்திச் செல்லப்பட்ட பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டிருந்ததை சோதனையிட்டதில், பெரும்பாலான கேமராக்கள் வேலை செய்யவில்லை. அங்கிருந்த ஒரு பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி யில் மட்டும் பேருந்து செல்வது பதிவாகியுள்ளது. அதனை வைத்து பேருந்து கடத்திய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |