பொள்ளாச்சியில் பைக்கை திருடிச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வள்ளியம்மாள் லே-அவுட்யில் வசித்து வருபவர் 23 வயதுடைய தொழிலாளி அரவிந்த். இவர் பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் பின்பக்கமாக உள்ள பேக்கரி முன் பைக்கை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அதன் பின் வெளியே வந்து பார்த்தபோது பைக் மற்றும் அதில் வைத்திருந்த செல்போன் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பொள்ளாச்சி அருகில் புரவிபாளையத்தில் வசித்துவரும் 20 வயதுடைய பாரதிகண்ணன் மற்றும் திருப்பூர் ராஜபாளையத்தில் வசித்து வரும் 24 வயதுடைய வெள்ளங்கிரி ஆகிய இருவரும் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.