மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மருந்து கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் அமானுல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூத்தாநல்லூர் பகுதியில் மருந்து கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அமானுல்லா டீ குடிப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி அமானுல்லா மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அமானுல்லா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் காயமடைந்த ராஜவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர்.