Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ குடிக்க போனபோது… திடீரென வந்த யானை.. உயிரிழந்த காவலாளி…. அச்சமூட்டும் சாலை…!!

காட்டு யானை தாக்கி பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டத்திலுள்ள செல்வபுரம் என்ற பகுதியில் முகமது நிவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதமலை சாலையில் கட்டுமான பணி நடைபெறும் ஒரு தனியார் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முகமது நிவாஸ் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார்.

அச்சமயம் திடீரென எதிர்பாராவிதமாக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஒருகாட்டு யானை சாலைக்கு வந்தது. இதனைக் கண்ட முகமது நிவாஸ் உடனே தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் அவரை துரத்தி வந்த காட்டு யானை முகமது நிவாஸ்-ஐ கடுமையாக தாக்கியது. இதனால் படுகாயம் அடைந்த நிவாஸ் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின் அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. மேலும் முருக பக்தர்கள் அதிகமாக கோவிலுக்கு செல்லும் மார்கழி மாதத்தில் கோவை-மருதமலை சாலையில் இவ்வாறாக காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழந்த சம்பவம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இடையே மிகுந்தபயத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |