கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பச்சேரி பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னதுரை டீ குடிப்பதற்காக சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி சின்னதுரையின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னதுரையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.