Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ-சர்ட் போட சொல்றாரு…. வகுப்புகளை புறக்கணித்த மாணவிகள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு அளித்த ஆசிரியரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளலூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் விஜய் ஆனந்த் என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு விஜய் ஆனந்த் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து மாணவிகள் கூறும் போது, கணித ஆசிரியர் வகுப்பின் போது மாணவிகளின் உடலைத் தொட்டு பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் வீடியோ கால் செய்து டீ-சர்ட் போடுங்கள் என கூறி வாட்ஸ் அப்பில் ஆபாசமான புகைப்படம் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளார். எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா விஜய் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |