Categories
அரசியல்

“டீ பில்” வரட்டும்….. வெய்ட் பண்ணி பார்ப்போம்….. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்….!!!

ஆளுநர் நடத்திய தேநீர் விருந்துக்கான பில் வரட்டும் காத்திருப்போம் என்று நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு, தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தேனீர் விருந்து நடத்தினார். இதற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்த நிலையில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த தேநீர் விருந்து வைத்து தற்போது ஒரு விவாதமே நடந்து வருகின்றது.  திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்த தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதனாலென்ன ஆளுநருக்கு டீ செலவு மிச்சம் என்று பதிலளித்திருந்தார்.

இது திமுக கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஷாநவாஸ் பெட்ரோல் டீசல் விற்கும் விலைக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்று வருவதற்கான டீசல் செலவு மிச்சம் என்று கூறினால் சரியாக இருக்கும் என்று பதிலளித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரது கருத்துக்கு நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள் @aloor_ShaNavas  சகோதரரே,  இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் வரும் வரை காத்திருப்போம் என்று தெரிவித்தார் ஆளுநர் நடத்திய தேநீர் விருந்துக்கு தற்போது ட்விட்டரில் அனல் பறக்க விவாதம் எழுந்து வருகின்றது.

Categories

Tech |