டுகாட்டி இந்தியா நிறுவனம் எக்ஸ்-டையவெல் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்-டையவெல் டார்க் மாடல் விலை ரூ. 18 லட்சம் ஆகும். எக்ஸ்-டையவெல் பிளாக் ஸ்டார் விலை ரூ. 22.60 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி எக்ஸ்-டையவெல் சீரிசில் டையவெல் 1260 மாடலில் உள்ளதை போன்றே 1262சிசி, எல்-ட்வின் டெஸ்டா-ஸ்டிரெட்டா மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 157.8 பி.ஹெச்.பி. திறன், 127 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
போஷ் ஐ.எம்.யு., டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் ஏ.பி.எஸ்., குரூயிஸ் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், பல்வேறு ரைடு மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை செயல்திறன் வெளிப்பாடு, திராட்டிள் மற்றும் ஏ.பி.எஸ். இயக்கத்தை ஒவ்வொரு மோடிற்கும் ஏற்ப மாற்றியமைக்கிறது.
புதிய டுகாட்டி எக்ஸ்-டையவெல் டார்க் மாடலில் டார்க் ஸ்டெல்த் பெயின்ட், மேட் பிளாக் வீல்கள், கார்பன் பிளாக் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்-டையவெல் பிளாக் ஸ்டார் மாடலில் மேட் கிரே, மேட் பிளாக் மற்றும் ரெட் ஸ்டிரைப் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல்களுக்கான முன்பதிவு மற்றும் வினியோகம் துவங்கிவிட்டது.