Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டும்.. டும்…. “கே.எல் ராகுல் – அதியாவுக்கு கல்யாணம்”…. சீக்கிரமே… எப்போ தெரியுமா?

கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா அணியின் தொடக்க வீரரான கே.எல் ராகுலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி என்பவரின் மகளான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். பிரபல நடிகையும் அதியா ஷெட்டியும், ராகுலும் ஆரம்பத்தில் இருந்தே வெளிநாடுகளுக்கு ஜோடியாக செல்வது மட்டுமல்லாமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று வந்தனர். இந்த சூழலில் தான் இந்த ஆண்டு தாங்கள் இருவரும் காதலிப்பதாக இருவரும் தெரிவித்தனர்..

இந்நிலையில் கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த ஜோடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தேதி தெரியவில்லை.. இந்த திருமணம் மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் கோலாகலமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது..

ஏற்கனவே நடிகர் சுனில் ஷெட்டி சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் உங்கள் மகளின் திருமணம் எப்போது நடைபெறும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு  சுனில் விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் கே எல் ராகுல் சரியாக பேட்டிங் ஆடவில்லை.. இவரது ஆட்டம் குறித்து ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில், தற்போது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கே.எல் ராகுல் வரும் டிசம்பர் மாதம் வங்கதேச சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |