உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்பாக ப்ளூ டிக் பெற 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் செலவுகள் அதிகமாகவும், வருவாய் குறைவாகவும் இருப்பதால் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை 20 டாலர் என அறிவித்தார். இக்கட்டணத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதன் காரணமாக ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை $7.99 ஆக மாற்றினார். இப்போது ப்ளூ டிக் பெறுவதற்கான மாத சந்தாவை இணையதளம் வாயிலாக செலுத்தினால் $7 ஆகவும், ஐபோன் மூலமாக செலுத்தும்போது $11 ஆகவும் கட்டணம் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு விலை குறைக்கப்படுவதால் பயனாளர்கள் அதிகளவில் இணையதளம் வாயிலாகவே ப்ளூடிக் கட்டணத்தை செலுத்த விரும்புவர்.