யாஷிகா ஆனந்த் இணையத்தில் வெளியிட்ட நடிகை ஷாலினியின் பொய்யான கணக்கை ஆதரித்து டுவிட்டரில் வெளியிட்டது சர்ச்சைக்குள்ளாக்கியது.
யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கி சில மாதங்களாகவே சிகிச்சையில் இருந்தார். தற்போது தான் குணம் ஆகியுள்ளார். பழைய மாதிரி தற்போது இணையதளத்தில் சுறுசுறுப்பாக உள்ளார். அவர் இணையத்தில் பதிவிடும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த நேரத்தில் யாஷிகா ஆனந்த் இணையத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் இணையதள வாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினியின் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு ஒன்று பரவியது. யாஷிகா ஆனந்த் அது போலி என தெரியாமல் அதை இணையத்தில் ஆதரித்து வெளியிட்டுள்ளார். சமூகவலைத்தளத்தில் அஜீத்தின் மேனேஜர் அது போலியான கணக்கு என கூறியுள்ளார். இதை அறிந்த இணையதளவாசிகள் யாஷிகாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.