அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், உலகில் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை வாங்கியுள்ளார். பின்னர் அவருடைய மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளையும் விற்றுள்ளார். இவருடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு காரணம் டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக தான் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் டுவிட்டர் வாடிக்கையாளர்கள், டுவிட்டர் எலான் மஸ்க் வசம் வந்ததையடுத்து இந்த சமூக ஊடகத்தை இலவசமாக பயன்படுத்த முடியுமா ? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள சமீபத்திய டுவிட் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “எப்போதும் சாதாரண பயனர்கள் தொடர்ந்து டுவிட்டரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அரசாங்கம் மற்றும் வணிக பயனர்கள் சிறிதளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.