டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என பலர் வாக்களித்துள்ளனர்.
உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரை வாங்கினார். இதனையடுத்த அவர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கணக்குகளை முடக்கப்போவதாக அறிவித்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக வேண்டுமா என்பது குறித்து டுவிட்டரில் கருத்துக் கணிப்பு ஒன்றை முன் வைத்துள்ளார். இந்நிலையில் 1.70 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் வாக்களித்தனர். அதில் 57.5% பேர் தலைமை பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என வாக்களித்துத்ள்ளனர்.