டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் 4300 கோடி டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்துள்ளார். இந்த நிலையில் சவுதி இளவரசரும், டுவிட்டர் நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டாளர்களில் ஒருவருமான அல்வாலீத் பின் தலால் இதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எலான் மஸ்க் 54 டாலர் என்ற விலையில் ஒரு பங்கை வாங்க தயார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் டுவிட்டர் நிறுவனத்தின் வளர்ச்சியை ஒப்பிடும் போது எலான் மஸ்க் குறிப்பிடும் தொகை பங்கின் உள்ளார்ந்த மதிப்புக்கு அருகில் வரும் என்று தான் நம்பவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் சவுதி அரசு நிறுவனம் மற்றும் தன்னிடம் டுவிட்டர் நிறுவனத்தின் 5.2 சதவீத பங்குகள் இருப்பதாகவும், அதன் மதிப்பு மட்டும் 375 கோடி ரியால் என்று அல்வாலீத் பின் தலால் கூறியுள்ளார். அதேபோல் எலான் மஸ்க், அல்வாலீத் பின் தலாலிடம் இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, பத்திரிக்கை சுதந்திரம் தொடர்பாக சவுதி அரசின் நிலைபாடு என்ன, சவுதி அரசிடம் மொத்தம் எவ்வளவு டுவிட்டர் பங்குகள் உள்ளன என்று வினவியுள்ளார்.