உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள செய்திகளில் முக்கிய இடத்தில் இருப்பது தான் ட்விட்டர். இது உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சினிமா பிரபலங்கள்,அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.இவர்களை பின் தொடர்பவர்களும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த பிரபலமானவர்களின் கணக்குகளுக்கு ட்விட்டர் ப்ளூ டிக் வழங்கி வருகின்றது.
தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி உள்ள நிலையில் இந்த ப்ளூ டிக் வசதிகளைப் பெற மாதம் 1800 செலுத்த வேண்டும் என அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை ப்ரொமோட் செய்தல் உள்ளிட்ட வணிக ரீதியான பயன்பாடுகளுக்கும் ட்விட்டரில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி அதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருப்பது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது