டுவிட்டர் இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் கொடிக் கட்டி பறக்கிறது. உள்ளூர் முதல் உலக நாயகர்கள் வரை டுவிட்டரை பயன்படுத்துவதால் அதன் தாக்கமும், வீச்சும் அதிகமாக காணப்படுகிறது. இப்போதெல்லாம் பல சமூகமாற்றங்களுக்கு டுவிட்டரும் பெரும் பங்கு வகிக்கிறது. வீடியோ, போட்டோ உட்பட தங்களது கருத்துகளை எளிமையாக கொண்டு சேர்க்கவும், தங்களுக்கு கிடைத்த தகவல்களை மற்றவர்களிடம் அனுப்பவும் டுவிட்டர் பயன்படுகிறது. டுவிட்டர் தங்களின் பயனாளர்களுக்கு புளூடிக் கொடுத்து அங்கீரிப்பதன் வாயிலாக பொய்யான தகவல்களும், ஆதாரமற்ற தகவல்களும் அவற்றில் பரவுவது ஓரளவு தடுக்கப்படுகிறது. ஒரு டுவிட்டை பதிவிட்டால், அதனை முன்பெல்லாம் மாற்ற முடியாது.
ஆனால் இப்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்களால் டுவிட்டை பதிவிட்ட பிறகும் எடிட் செய்ய முடியும். இதனை விரைவில் உலகெங்கிலும் கொண்டு வர டுவிட்டர் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான்மஸ்க் வாங்க இருக்கிறார். இவற்றில் சிறு பிரச்சனைகள் நிலவியபோதும், பிறகு இருதரப்பும் சமாதனமாகி டுவிட்டர் விற்பனை இப்போது உறுதியாகி இருக்கிறது.
அதுமட்டுமின்றி டுவிட்டரில் பல்வேறு பொய் கணக்குகள் உள்ளதாகவும், அதனால் பல பிரச்சனைகள் இருப்பதாகவும் எலான் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதற்கிடையில் பொய்யான கணக்குகள் பற்றிய தரவுகளை டுவிட்டர் தனக்கு அளிக்கவில்லை என எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார். இப்போது இந்த விஷயமானது அவர்களுக்குள் பேசி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மற்றொரு அப்டேட் ஒன்றையும் விரைவில் டுவிட் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டுவிட்டை தற்போது யார் வேண்டுமானாலும் ஸ்கிரீன் ஷாட் எடுக்க இயலும். அதேபோன்று மற்றவர்களுக்கு அந்த டுவிட்டை பகிர ஸ்கிரீன் ஷாட் உதவியாக இருக்கும்.
ஆனால் இதனை டுவிட்டர் நிறுவனமானது விரும்பவில்லை. டுவிட்டை மற்றவர்களுக்கு பகிர விரும்பினால், அதனை அவருக்கு டுவிட்டரில் இருந்தே பகிரவேண்டும் என Twitter விரும்புகிறது. இதற்கென டுவிட்டர் பயனாளிகள் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முற்பட்டால், அவர்களுக்கு பாப்-அப் மெசேஜை டுவிட்டர் அனுப்புகிறது. அவற்றில் டுவிட்டரில் இருந்து பகிரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. விரைவில் டுவிட்டை ஷேர் செய்ய பிரத்யேக பட்டனை அந்நிறுவனம் கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வாட்ஸ்அப் தன் வியூ-ஒன்ஸ் வசதியில் அனுப்பப்படும் புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாதபடி அப்டேட் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.