ட்விட்டர் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய அம்சம் ஒன்றை வழங்கியுள்ளது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.
ட்விட்டர் நிறுவனம் சர்க்கில் என்ற பெயரில் புதிய அம்சம் வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் க்ளோஸ் ஃப்ரண்ட் ஷார்ட்லிஸ்ட் அம்சத்தை போன்றே ட்விட்டர் தளத்தில் இந்த சர்க்கில் அம்சம் இருக்கும். சர்க்கிளில் சேர்க்கப்பட்டவர்கள் மட்டுமே உங்களின் ட்விட்களைப் பார்க்கவும் முடியும். அதே நேரத்தில் எடிட் பட்டன் வசதியும் வழங்க உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் புது அம்சம் மட்டுமின்றி ரிவைஸ் செய்யப்பட்ட ஹெல்ப் செண்டர் பக்கத்தில் டுவிட்டர் சர்கில் அம்சம் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறது.
தற்போதைய பயனாளர்கள் ஒரு சர்க்கிலை மட்டும் உருவாக்க முடியும். ஒரு சர்க்கிளில் அதிகபட்சமாக நீங்கள் 150 பேரை இணைத்துக் கொள்ளலாம். சர்க்கிளில் சேர்க்கப்பட்ட விவரங்களை சர்க்கிளை உருவாக்கியவர்கள் மட்டுமே பார்க்க முடியும். இந்த சர்க்கிளில் பதிவிடப்படும் பதிவுகளை அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். மேலும் சர்கிலினுள் பதிவிடப்படும் டுவிட்களை ரிடுவிட் செய்ய முடியாது. தகவல்களில் உள்ள மீடியா அல்லது ஸ்கிரீன்ஷாட்களை பயனர்கள் ரி-ஷேர் செய்ய முடியும். ஒருமுறை சர்கிலினுள் சேர்க்கப்பட்டால் அதிலிருந்து வெளியேற முடியாது. சர்கிலினுள் கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் கன்வெர்சேஷனை மியூட் செய்யலாம் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.